தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசுத்தொகை வழங்கியது.
ரேஷன் கடை வாயிலாக 10ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டன. மொத்த கார்டு தாரர்களில் 11.40 லட்சம் பேர் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை.
எனவே கார்டுதாரர்கள் வாங்காமல் மீதமான மொத்த தொகையான 114 கோடி ரூபாயை கூட்டுறவு சங்க அதிகாரிகள் அரசு வங்கி கணக்கில் திரும்ப செலுத்தியுள்ளனர்.