• vilasalnews@gmail.com

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

  • Share on

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். 

நாளை தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும் காணப்படும். வருகின்ற 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகம் , புதுவை , காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

“நானும் தடுப்பூசிப் போட்டுக்கொள்கிறேன்“: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஆயத்தப் பணிகளைத் தொடங்க தேர்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி

  • Share on