• vilasalnews@gmail.com

சாலை விபத்தில் செய்தியாளரின் மனைவி பலி... மீட்பு பணியில் ஈடுபட்ட அமைச்சர்!

  • Share on

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நேற்று மாலை நடந்த சாலை விபத்தில் வத்தலகுண்டு தினமலர் செய்தியாளரின் மனைவி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தை பார்த்த அமைச்சர் செய்தியாளரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

திண்டுக்கல் செம்பட்டியை அடுத்த ஆதிலட்சுமிபுரம் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்து குறித்த தகவலறிந்த திண்டுக்கல் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த தினமலர் செய்தியாளர் பிரபு என்பவரின் மனைவி சத்திய பிரியா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்தநிலையில், தேனியில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, விபத்து நடந்த இடத்தை கடந்தபோது, தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி மீட்பு வாகனம் வரவழைத்து பேருந்துக்குள் சிக்கிய காரை மீட்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், வத்தலகுண்டு தினமலர் செய்தியாளர் பிரபு காரில் மயக்க நிலையில் இருந்தார்.


அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால், தனக்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸின் வாகனத்தில் பிரபுவை ஏற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர், செய்தியாளர் மனைவியின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி செல்லும் வழியில், விபத்து நடந்த இடத்தினை யதார்த்தமாக கடந்து சென்று விடாமல் சம்பவ இடத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களை உடனே மீட்டு, தனது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தையும் அனுப்பி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் செயலை கண்டு அப்பகுதியினர் நெகிழ்ந்தனர்.

  • Share on

கிளாம்பாக்கம் இல்லை... கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ் செல்லும் - உரிமையாளர்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடையா? அறநிலையத்துறை என்ன சொல்கிறது?

  • Share on