• vilasalnews@gmail.com

பிரபல யூடியூப்பர் கே.ஜி.எஃப் விக்கி தேமுதிகவில் ஐக்கியம்? விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு தினமும் தண்ணீர் பாட்டில்களை இலவசமாக வழங்க முடிவு

  • Share on

விஜயகாந்த் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு தினமும் தண்ணீர் பாட்டில்களை இலவசமாக வழங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார் யூடியூப்பர் கே.ஜி.எஃப். விக்கி.

ராஜா பகவத் மாதிரி இருக்கேனா எனப் பேசி ஒரே வீடியோவில் சோசியல் மீடியா மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் கே.ஜி.எஃப். விக்கி. இன்றும் கூட அவரது வீடியோக்கள் வைரலாக உலா வந்துக் கொண்டிருக்கின்றன. இப்போது இவர் சொந்தமாக ரெடிமேட் ஆடை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் மனமுருகி அஞ்சலி செலுத்திய அவர், அங்கு வந்த பிரேமலதா விஜயகாந்தை பார்த்ததும் ''கேப்டன் வாழ்க.. கேப்டன் புகழ் வாழ்க..'' என பெருங்குரலெடுத்து ஹைடெசிபலில் முழக்கம் எழுப்பியதால் ஸ்டன் ஆன பிரேமலதா, விக்கியை பார்த்து நீங்க மதுரையா என கேள்வி எழுப்பினார். அதற்கு ''இல்லம்மா நான் சென்னை தான். அண்ணனோட படத்தை (அதாவது விஜயகாந்த் இளையமகன் சண்முகபாண்டியனின் அடுத்த படத்தை) வெள்ளிவிழா கொண்டாடனும் அம்மா'' என கே.ஜி.எஃப். விக்கி கூறினார்.

இதையடுத்து கே.ஜி.எஃ. விக்கியை மதிய உணவு சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கூறிய பிரேமலதா விஜயகாந்த், என்ன பிரச்சனை, கோரிக்கை என்றாலும் தன்னை வந்து பார்க்கலாம் என்றும் எப்போது வேண்டுமானாலும் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வரலாம் எனவும் கே.ஜி.எஃப். விக்கியிடம் கூறினார். இதனால் உற்சாகமான கே.ஜி.எஃப். விக்கி, காலம் காலமாக விஜயகாந்துடன் பயணித்தவர்களையே மிஞ்சும் அளவுக்கு ஓவராக உணர்ச்சிவசப்பட்டு ''கேப்டன் வாழ்க'' என பிரேமலதா முன்னிலையில் தொடர்ந்து முழங்கினார்.

விஜயகாந்தை போலவே அவரது மகன்களும் வர வேண்டும் என விருப்பம் தெரிவித்த கே.ஜி.எஃப்.விக்கி மற்றும் அவரது நண்பர்கள் தேமுதிக ஆட்சிக்கு வர வேண்டும், அல்லது மீண்டும் எதிர்க்கட்சியாகவாவது வர வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை ஒளிவு மறைவின்றி தெரிவித்தனர். இதன் மூலம் கே.ஜி.எஃப். விக்கி தேமுதிகவில் ஐக்கியமாகும் திட்டத்தில் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், நாளை முதல் என்னால் முடியும் வரை தினமும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு தினமும் தண்ணீர் பாட்டில்களை இலவசமாக வழங்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

  • Share on

ராமனை இழிவு படுத்தி முகநூல் பக்கத்தில் பதிவு : ஆதி தமிழர் பேரவை நிர்வாகி மீது இந்து முன்னணி அமைப்பினர் காவல் ஆணையாளரிடம் புகார்

இன்று முதல் டிடி பொதிகை சேனல் கிடையாது... டிடி தமிழ் என ஒளிபரப்பு- மோடி தொடங்கி வைக்கிறார்

  • Share on