• vilasalnews@gmail.com

ராமனை இழிவு படுத்தி முகநூல் பக்கத்தில் பதிவு : ஆதி தமிழர் பேரவை நிர்வாகி மீது இந்து முன்னணி அமைப்பினர் காவல் ஆணையாளரிடம் புகார்

  • Share on

ஸ்ரீ ராமபிரானை  இழிவுபடுத்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்து வெளியிட்ட ஆதி தமிழர் பேரவையின் நெல்லை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி அமைப்பினர் மாநகர காவல் ஆணையாளர் சந்தித்து மனு அளித்தனர்.

அயோத்தியில் ஸ்ரீராமபுரானுக்கு மிகப்பெரிய அளவில் கோயில் கட்டி விரைவில் குடமுழக்கு  விழா நடைபெற உள்ளது. இதற்காக இந்து அமைப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக இந்தியா முழுவதும் உள்ள நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பான முறையில் குடமுழக்கு விழா நடத்துவதற்கு தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ் என்பவர் தனது ஆதரவாளர்கள் உடன் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்களை சந்தித்து மனு அளித்தார். 


அந்த மனுவில் நெல்லை மாவட்டம் ஆதி தமிழர் பேரவையை சேர்ந்த மாவட்டச் செயலாளர் கலைக் கண்ணன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் ராமபிரானை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நீ கொலைகார பயல் தானே இப்பதான் உன் கேஸ் டீடைல் பார்த்தேன் பொண்டாட்டியை சந்தேகப்பட்டு கேவலப்படுத்தி தீக்குளிக்க செஞ்சவன் தானே, தவம் பண்ணிக்கிட்டு இருந்த சம்பூகன சாதி பெயரை சொல்லி அவன் தலையை வெட்டி ஆவணகொலை  பண்ணின பொறுக்கி தானே, வாலியை கேவலமாக மறைந்து கொன்றவன்   தானே, உன் சில்லறை சேட்டை எல்லாம் வடக்க வச்சுக்கோ தமிழ்நாட்டில் வச்சிகாதே என்பது போன்ற வசனத்தை சூர்யா பேசுவது போலவும், ராமபிரான் நின்று குற்றவாளி போல் கேட்பது போலவும், சூர்யா நடித்த சிங்கம் படத்தை வெளியிட்டு ஒரு கலவரத்தை தூண்டும் விதமாக வெளியிட்டுள்ளார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொடுமை : அண்ணாமலை பரபரப்பு புகார்!

பிரபல யூடியூப்பர் கே.ஜி.எஃப் விக்கி தேமுதிகவில் ஐக்கியம்? விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு தினமும் தண்ணீர் பாட்டில்களை இலவசமாக வழங்க முடிவு

  • Share on