• vilasalnews@gmail.com

மருத்துவருக்கு பாலியல் தொல்லை பாஜக பிரமுகர் அதிரடி கைது

  • Share on
சிகிச்சைக்கு சென்ற இடத்தில் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகர்கோவில் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். பல்வேறு கட்சிகளில் இருந்த வந்த இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். சமீப காலமாகவே இவர் அப்பகுதியில் பாஜக பிரமுகராகவே அறியப்படுகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்கோளாறு காரணமாக நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். தொடர் சிகிச்சை என்பதால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறார்.

அப்போது இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் செல்போன் எண்ணை கேட்டு பெற்றிருக்கிறார். தொடக்கத்தில் மருத்துவ தேவைக்காக அழைத்த அவர், பின் நாட்களில் அடிக்கடி தேவையில்லாமல் அழைத்திருக்கிறார். போன் எடுக்காத நேரத்தில் மருத்துவமனைக்கு நேரிலேயே வந்து தொந்தரவு கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் இந்த தொல்லையை மருத்துவர் சகித்துக்கொண்டிருக்க, ஒருநாள் இது பாலியல் தொல்லையாக உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த பாலியல் தொல்லையை சகித்துக்கொள்ள முடியாத மருத்துவர், இதிலிருந்து விலக முயன்றிருக்கிறார். ஆனாலும், ஜெயக்குமார் விடாமல் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனையடுத்து கோட்டார் காவல் நிலையத்தில் மருத்தவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மட்டுமல்லாது அவரை உடனடியாக கைதும் செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் இவர் ஈடுபட்டிருக்கிறார். இதுபோன்று ஏராளமான மோசடி குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கின்றன. சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது ஏற்கெனவே இருக்கின்றன. இது எல்லாவற்றையும் விட ஹைலைட் என்னவெனில், இவர் கடந்த 2022ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதுதான்.

நீண்ட நாட்களாக சிறையிலிருந்த அவர், வெளியே வந்து பாஜகவில் இணைந்திருக்கிறார். இந்நிலையில் தற்போது பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பதாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டிருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது.
  • Share on

தமிழக மதுப்பிரியர்களே.. இத கொஞ்சம் நோட் பன்னிக்கோங்க...டாஸ்மாக் மதுபான கடைகள் 3 நாட்கள் மூடப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு!

தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் இனப்பெருங்குடிகளின் பேராதரவுடன் 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்!

  • Share on