• vilasalnews@gmail.com

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

  • Share on

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தமிழக தேர்தல் ஆணையம் வெளியி்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. இதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர், டிசம்பரில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதற்காக, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இவற்றை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.   தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845- வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 5.09 லட்சம் பேர் நீக்கம்; புதிதாக 21.39 லட்சம் வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளது.

  • Share on

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை

“நானும் தடுப்பூசிப் போட்டுக்கொள்கிறேன்“: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

  • Share on