அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.1000 கிடைக்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம்.அந்த வகையில், 2024-ம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைததாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும் என்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.