சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி அன்று ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான், துபாய், உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்று வந்துள்ள நிலையில் இப்போது, வரும் 28ஆம் தேதி அன்று ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் இந்தப் பயணத்தில் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. இதனால் முதலமைச்சரின் நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.