• vilasalnews@gmail.com

சதுரகிரியில் வழிபாடு அனுமதி இல்லை!

  • Share on

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனத்துறை அறிவித்துள்ளது.

இக்கோவிலில் ஜனவரி 9ஆம் தேதி பிரதோஷம், 11ஆம் தேதி அமாவாசை சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஜனவரி 9 முதல் 12 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

  • Share on

அன்று இப்படி பேசிய வாய்... விஜய்யை வறுத்தெடுக்கும் திமுகவினர்!

விடிய விடிய கொட்டிய கனமழை.. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் லீவ்?

  • Share on