வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் கலைஞரின் 100 நிகழ்ச்சி நடந்தது. திரை உலகினர் நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் என பல நட்சத்திரங்கள் வந்திருந்தனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித், விஜய் கலந்து கொள்ளவில்லை.
கடந்த 2010 ஆம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், கலைஞருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும். அவருடைய நூறாவது வயதில் இதே போல் ஒரு நிகழ்ச்சியில் நடத்த வேண்டும். அந்த நிகழ்ச்சியில் நான் அவருடன் இணைந்து அந்த சிலையை ரசிக்க வேண்டும் என்றார். ஆனால் நேற்று முன்தினம் நடந்த கலைஞர் நூறாவது விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, அன்னைக்கு அந்த வாய் பேசிய விஜய், இன்று நிகழ்ச்சி ஏன் வரவில்லை என்று சமூக வலைதள பக்கங்களில் விஜயை வறுத்தெடுத்து வருகின்றனர் திமுகவினர்.