• vilasalnews@gmail.com

ஏன் கோட் சூட் போட்டு வந்துள்ளேன் தெரியுமா.. அடடே விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

  • Share on

இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஏன் கோட் சூட் போட்டு வந்துள்ளேன் என்பது விளக்கமளித்தார். அவரது பதில் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

உலகளவில் இருந்து பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இப்போது தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகச் சென்னைக்கு மட்டுமே அதிக முதலீடுகள் கிடைக்கும் நிலையில், இப்போது பரவலாக அனைத்து பகுதிகளிலும் முதலீடுகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் முதல் நாளான இன்றே பல முதலீடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹6180 கோடி கூடுதலாக முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் ₹ 5600 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், கோத்ரேஜ் நிறுவனம் ₹515 கோடியும் மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ₹200 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.

இது மட்டுமின்றி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ₹12,082 கோடி முதலீடு செய்துள்ளது இதன் மூலம் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெகட்ரான் நிறுவனம் ₹1000 கோடி முதலீடு செய்துள்ள நிலையில் இதன் மூலம் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். JSW நிறுவனம் 6600 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ. 10,000 கோடி முதலீடு செய்துள்ளது. டிவிஎஸ் நிறுவனமும்- ரூ 5000 கோடி முதலீடு செய்துள்ளது.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளார். கடந்த 2.5 ஆண்டுகளில் பெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் கடந்த 2 ஆண்டுகளில் பல தொழில் கொள்ளைகள் உருவாக்கப்பட்டுள்ளன. என்றும் அவர் தெரிவித்தார்.

வழக்கமாக வேட்டி சட்டை அணிந்தே அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் இந்த முறை, கோட் சூட் அணிந்து கலந்து கொண்டார். மேலும், அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

இது குறித்து அவர் பேசுகையில், "பொதுவாக நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கோட் சூட் அணிவது வழக்கம். ஆனால், இன்று அனைத்து வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதால், நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக இருக்கிறது" என்றார். அவரது பேச்சு இப்போது டிரெண்டாகி வருகிறது.

  • Share on

சுவாமிக்கு ரொம்ப தான் குசும்பு... ஆன்மீகத்தில் மிக்ஸ் பண்ணி அடிச்சு விடுறார்!

மனிதாபிமானத்தின் காவலர்கள்... விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரை காப்பாற்றிய வாட்ஸப் குழு

  • Share on