அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ஜன.22 அன்று ராமனின் குழந்தை வடிவிலான பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ் மற்றும் அட்சதையை மக்களுக்கு விநியோகிக்கும் வகையில் பொறுப்பாளர்களுக்கு அவற்றை வழங்கும் விழா மதுரையில் நடந்தது.
இதில் மதுரை ஆதீனம் பேசுகையில், ராமன் தனக்கு கிடைத்த ராஜ பதவியை தூக்கி எறிந்து கானகத்திற்குச் சென்றார். அவர் வனத்திற்கு செல்கையில் அவரது முகம் 'அன்றலர்ந்த தாமரை போல இருந்தது' என கம்பர் கூறுகிறார். இப்போது அப்படி கூறியிருந்தால் கம்பரை தாமரை கட்சிக்காரர் என்று கூறிவிடுவர்.
அப்போதே தாமரைதான் மலர வேண்டும் என சொல்லிவிட்டார். நான் சொல்லலப்பா. நான் சொல்லியிருந்தால் வழக்கு போட்டிருப்பாங்க. கம்பரும் வேற எந்த பூவையும் சொல்லாமல் தாமரையை தான் சொல்லி உள்ளார் என்றார்.
இதைக் கேட்ட அங்கிருந்த ஒரு பார்வையாளர் ஒருவர், சுவாமிக்கு ரொம்ப தான் குசும்பு, ஆன்மீகத்தில் அரசியலை மிக்ஸ் பண்ணி அடிச்சு விடுறார் பாருங்க என கமெண்ட் அடித்தார்.