தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எவராலும் வெறுக்க முடியாத நபராக அனைவராலும் அன்போடு கேப்டன் என அழைக்கப்பட்ட விஜயகாந்த் மறைவுக்கு கட்சி, சினிமாவில் விருப்பு, வெறுப்பின்றி அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதில், சினிமாவில் தன்னை வளர்த்தவர்களில் ஒருவரான விஜயகாந்தை வடிவேலு நேரில் சென்று பார்த்து தன் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என அனைவரின் எதிர்பார்த்த நிலையில், அவர் வராமல் போனார். வடிவேலு விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு வராதது குறித்து தற்போது வரை சமூக ஊடக பக்கங்களில் விவாதிக்கப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி இடம் பெற்றது. அத்தேர்தலில் திமுக சார்பில் தேர்தல் பிரசாரத்திற்காக களமிறக்கப்பட்டார் வடிவேலு. அவர் பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் விஜயகாந்தை தாறுமாறாக விமர்சித்தார். இதனைக் கேட்டு தமிழ்நாடு மக்களே அதிர்ச்சியடைந்தனர்.
அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு வடிவேலுவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. வடிவேலு விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் உண்மையில் கோபப்பட வேண்டிய விஜயகாந்த் வடிவேலுவை நினைத்து வருத்தப்பட்டதாக பிரமலதா நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் வடிவேலுவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதது பற்றியும் பேசியுள்ளார்.
அவரெல்லாம் பிறவி கலைஞன். எல்லா தயாரிப்பாளரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். விஜயகாந்தும் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களிடம் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டார் எனவும் பிரேமலதா தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய வடிவேலு, அவருக்கு கேப்டன் னு பேரு வச்சிருக்காங்க, எந்நேரமும் தண்ணிய போட்டுகிட்டு இருக்குறவருக்கு பேரு கேப்டனா? தண்ணீல மிதக்குற கப்பலை ஓட்டுறவனுக்கு பேருதான் கேப்டனு, எந்நேரமும் தண்ணில மிதக்குறவனுக்கு பேரு கேப்டன் கிடையாதுனு, அனைவராலும் அன்போடு ’கேப்டன்’ என அழைக்கப்பட்ட விஜயகாந்த்தை திட்டி தீர்த்தார்.
வடிவேலின் இந்த பேச்சுக்கு, பிரதமர் மோடி பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய பேச்சு தான் தமிழகத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
அதாவது, திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர் காலமானார். சினிமாவில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் அல்ல அரசியலிலும் கேப்டன். தேசத்தை அதிகம் நேசித்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன் என தனது இரங்கள் செய்தியில் விஜயகாந்திற்கு புகழாரம் சூட்டினார்.
மோடியோட இந்த பேச்சு, வடிவேலு மூஞ்சில கரிய பூசுன மாதிரி இருக்குனு நெட்சன்களும், விஜயகாந்த் ரசிகர்களும் வடிவேலுவை வச்சு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.