• vilasalnews@gmail.com

சென்னை வியாபாரிகளை தென் தமிழகத்தில் இருந்து வந்த ஒரு சராசரி மனிதர்களாக பார்த்துவிடாதீர்கள்... குரல் கொடுக்கும் ராக்கெட் ராஜா

  • Share on

செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி பகுதியில், மர்ம நபர்களால் வியாபாரி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பனங்காட்டுப்படை  கட்சி தலைவர் ராக்கெட் ராஜா வீடியோ வெளியிட்டு உள்ளார்.

சென்னை மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் ( வயது 44  ). ஓட்டேரியிலுள்ள ஐந்தாவது பிரதான சாலையில் மருந்து கடை  நடத்தி வருகிறார்.

இந்நிலையில் டிசம்பர் 30ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று உணவுப்பொருட்கள்  வாங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் வினோத் குமாரை தலையில் சரமாரியாக  வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனால் ரத்த வெள்ளத்தில் வினோத் குமார் உயிரழந்தார். தகவல் அறிந்து வந்தால் ஓட்டேரி போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், வியாபாரி வினோத் குமாரின் படுகொலையை கண்டித்து, தென் தமிழகத்தின் பிரபல ரவுடியாக அறியப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் உதவியாளராக இருந்தவரும், தென் மாவட்டத்தின் பிரபல ரவடியாக காவல்துறையால் அறியப்படுபவரும், பனங்காட்டுப்படை  கட்சி தலைவருமான, நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் :- 

சென்னை வண்டலூரில் வினோத் என்ற வியாபாரி, கஞ்சா ரவுடிகளின் அராஜ போக்கினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரிந்தது ஓர் உயிர் அல்ல. அது எங்கள் உறவு. இந்த நேரத்தில் தமிழக அரசும், காவல்துறையும் கண்டிப்பாக வியாபாரிகளிடம் மாமூல் கேட்கும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்கனும். வியாபாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும். இல்லையென்றால், வியாபாரிகளுக்கான பாதுகாப்பு, வியாபாரிகளின் கைகளிலேயே வந்து சேருகிற ஒரு நிலை வந்துவிடக்கூடாது.

ஆகவே, இந்த மாதிரியான விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, காவல் துறை மூலமாக உடனடி நடவடிக்கை இந்த நேரத்தில் தேவை. 

ஏதோ சென்னையில் வாழ்கிற வியாபாரிகளையெல்லாம், தென் தமிழகத்தில் இருந்து வந்த ஒரு சராசரி மனிதர்களாக பார்த்துவிடாதீர்கள். அவர்கள் பின்னாடி ஒட்டு மொத்த சமூகமே இருக்கிறது. ஆகவே, வாழ வந்தவர்களை வாழ விடுங்கள். இந்த மாதிரி தொந்தரவுகளை நாங்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டோம். ஆகவே இச்செயலை வண்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசும், காவல்துறையும் இது போன்ற கஞ்சா ரவுடிகள் அட்டகாசத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வன்மையான கண்டனத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

  • Share on

வங்கி ஊழியர்கள் ஹேப்பி... இந்த மாதம் இப்படியாமே!

விஜயகாந்த் யார்? ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் பெற்ற மோடி சொன்ன அந்த வார்த்தை!

  • Share on