தேசிய வங்கிகள், தனியார் வங்கிகளுக்கு மாதத்தின் 2, 4 வது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று விடுமுறை. பொங்கலை முன்னிட்டு 15ஆம் தேதி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 16ஆம் தேதியும் விடுமுறை.
உழவர் திருநாளை முன்னிட்டு 17ஆம் தேதி, தைப்பூசத்தை முன்னிட்டு 25ஆம் தேதி, குடியரசு தினத்தை முன்னிட்டு 26 ஆம் தேதியும் விடுமுறை. நான்கு ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை. எனவே இம்மாதம் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறையாக உள்ளது.