தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 18ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் பல்வேறு கோயில்களில் கேப்டன் உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனைகளை செய்கிறார்கள். மேலும், சிலர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு வருகை தருவதாலும், அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸார் அமர்த்தப்பட்டுள்ளனர்.