• vilasalnews@gmail.com

விஜயகாந்த் உடல்நிலை - மருத்துவமனை அதிர்ச்சி அறிக்கை!

  • Share on

தேமுதிக தலைவரும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த நவ. 18ஆம் தேதி சென்னையில் மியாட் மருத்துவமனையில் சளி, இருமல், தொண்டை வலி போன்ற உடல்நிலை பிரச்னைகள் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், மியாட் மருத்துவமனை விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை இன்று (நவ. 29) வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், விஜயகாந்த்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணிநேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாள்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது' மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

  • Share on

அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்த இடங்களில் வருமானவரித்துறை சோதனை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை : மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

  • Share on