அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களான திருவண்ணாமலை, சென்னை தி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30 கார்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திமுகவில் செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மிக நெருக்கமானவரும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள், மருத்துவக்கல்லூரி, தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களான திருவண்ணாமலை, சென்னை தி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30 கார்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வரி ஏய்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.