பேனா வடிவ போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளின் அருகே போலீசார் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக பேனா வடிவில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக கல்வி அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளன. அவற்றை வாங்கி மாணவர்கள் உறிஞ்சுவதால் போதைக்கு அடிமையாகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனையின் படி பள்ளிகளில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்த கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். போலீசார் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு போதைப்பொருள் பயன்பாடு ஒழிப்பு நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் உள்ள கேண்டின்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.