தமிழகத்தில் மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். நடப்பு சீசனில் காற்றாலைகளில் இருந்து தினமும் 3,500 முதல் 4000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்தது.
இதனால் 4,320 மெகாவாட் திறன் உடைய அனல் மின் நிலையங்களில் 2000 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி குறைக்கப்பட்டது. காற்றாலை சீசன் முடிந்ததால் சில தினங்களாக ஆயிரம் மெகாவாட்டுக்கு குறைவாகவே மின்சாரம் கிடைக்கிறது. இதனால் மின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடி மின்வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளதால், அனல் மின் உற்பத்தி 3100 மெகாவாட்டாக அதிகரிக்கப் பட்டுள்ளது.