தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 2376 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு 27.77 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டமான போக்சோ 2012ல் அமலுக்கு வந்தது. அதில் 2019ல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தைகளின் அடையாளங்கள் வெளியிடக்கூடாது. தேவையை பொருத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்கியது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பாலியல் தொல்லைக்கு ஆளானது தொடர்பாக 5,925 குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளில் 2,376 குழந்தைகளுக்கு 27.77 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3,549 குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய உள்ளது என்றனர்.