• vilasalnews@gmail.com

தெர்மா கோல் போட்டு மூடிருவோம்... செல்லூர் ராஜூவை கலாய்த்த அமைச்சர்

  • Share on

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி, முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மறைந்த எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தொடங்கிய கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ, “கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்க்கையை ஏற்று முல்லை பெரியாறு அணையில் இருந்து தங்கு தடையின்றி தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்த பணிகள் நடந்து வருகிறது. ஆனால் அது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணியை விரைவுபடுத்தி 24 மணி நேரமும் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் வெளியே வராமல் வீட்டில் இருந்தே தண்ணீர் பிடிக்கும் திட்டத்தை முடித்துக் கொடுப்பாரா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரியார் அணை நீர் ஆதாரமாக கொண்டு கம்பத்தில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு 160 எம்.எல்.டி க்கு மேலாக திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதே தவிர கிணறு தோண்டும் பணிகளை வனத்துறை தரவில்லை. நாங்கள் வந்த பிறகு அனுமதி வாங்கினோம். இன்னும் 15 கி.மீ பணிகள்தான் பாக்கி உள்ளது. செல்லூர் ராஜூ கேட்டது போல் சுத்தமான தண்ணீரை நிச்சயம் வழங்குவோம் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”மாண்புமிகு செல்லூர் ராஜூ கேட்டது போல் தண்ணீ நிச்சயமா கொடுப்பாரு. அந்த தண்ணீ டேமில் காலியாகாமல் இருக்க தெர்மாகோலை போட்டு மூடி வைத்துள்ளோம் ஒன்னும் கவலைப்படாதீங்க...!” என்றார். துரைமுருகன் நையாண்டி பேச்சால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

  • Share on

கோவில் ஊரணியை அழகுபடுத்த மோசடி செய்வதாக பொதுமக்கள் புகார்!

"சாதிதான் அடிப்படை... சமூக நீதி என்று பேசினால் போதாது; செயலில் காட்டுங்க": அன்புமணி ஆவேசம்!

  • Share on