கோட்டையூரில் உள்ள சொற்கோட்டான் விநாயகர் கோவில் ஊரணியின் உட்பகுதி மற்றும் நடைபாதையில் ஃபேவர் பிளாக் கற்கள் பதித்து, கைப்பிடி தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஊரணியின் உட்பகுதியில் இருந்து மண் எடுத்து, இரவு நேரத்தில் கடத்தப்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
ஊரணியில் இருந்து மண் அள்ளவில்லை என்று முதலில் தெரிவித்த பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா, பின்னர் ஊரணியில் இருந்து எடுக்கப்படும் மண் அதனை சுற்றியே கொட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.