• vilasalnews@gmail.com

அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென மருத்துவமனையில் அனுமதி!

  • Share on

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை திடீரென சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் கிளம்பியது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கைக் கையில் எடுத்தது.

இந்த விவகாரத்தில் கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை ரெய்டு நடத்திய நிலையில், அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையிலேயே இருந்து வந்தார். இதற்கிடையே திடீரென இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  • Share on

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து!

கோவில் ஊரணியை அழகுபடுத்த மோசடி செய்வதாக பொதுமக்கள் புகார்!

  • Share on