திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ஐடி ரெய்டு நடத்தி வருகின்றனர். அவர் வீடு மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 40 இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக அமலாக்கத்துறை அடிக்கடி ரெய்டுகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளனார். வேலைவாய்ப்பு வாங்கி கொடுப்பதில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை ரெய்டுக்கு செந்தில் பாலாஜி உள்ளனார். இதில் அவரிடம் நீண்ட விசாரணை நடத்தி அமலாக்கத்துறை அவரை கைதும் செய்ததும்.
தற்போது புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இதுவரை பெயில் கிடைக்கவில்லை. அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
அதன்பின் மணல் விற்பனையாளர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு எல்லாம் பார்க்கும் போது திமுகவின் நிதி ஆதாரங்களில், திமுகவிற்கு தேர்தல் செலவு செய்யும் நபர்களிடம் அமலாக்காக்கத்துறை ரெய்டு நடத்துகிறதோ என்ற கேள்வி எழுந்தது. அதாவது தேர்தல் நேரத்தில் திமுகவை செலவு செய்ய விடாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில்தான் தற்போது திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ஐடி ரெய்டு நடத்தி வருகின்றனர். அவர் வீடு மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 40 இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது,