• vilasalnews@gmail.com

யார் போடலாம், யார் போடக்கூடாது!

  • Share on

கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம், யார் போடக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இந்தியாவில் கோவாக்சின்  மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி இந்த இரண்டு தடுப்பூசிகளும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி கடந்த வாரம் தமிழகம் வந்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தடுப்பூசி சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம் யார் போடக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது அதன்படி.

  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரனோ தடுப்பூசி போட வேண்டும்.
  • ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு 14 நாட்கள் கழித்து அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும்.
  • முதல் டோஸ்ல் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ அதே தடுப்பு மருந்து தான் இரண்டாவது டோஸ்சிலும் அளிக்கப்பட வேண்டும். தடுப்பு மருந்துகளை மாற்றி கொடுக்கக்  கூடாது.
  • குறிப்பிட்ட மருந்துகள், உணவுப்  பொருட்கள், கொரோனா தடுப்பு மருந்துகள் அல்லது ஊசி மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள் தடுப்புமருந்து முதல் டோசின் போது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது.
  • காய்ச்சல் இருப்பவர்கள், மாதவிடாய் சரியான இடைவெளியில் இல்லாதவர்கள், நோய் எதிர்ப்புக் குறைபாடு உடையவர்கள் தடுப்பூசி போடக் கூடாது.
  • கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போடக் கூடாது
  • கொரோனா அறிகுறி உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள், நோயால் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருப்பவர்கள் தடுப்பூசி போடக்கூடாது.

  • Share on

த.மா.க மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

  • Share on