தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஞானதேசிகன்( 71 ), உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவம னையில், நவம்பர் 11 ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தமிழ்நாட்டிலிருந்து இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஞானதேசிகன். 2011 முதல் 20014 ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்தார்.