• vilasalnews@gmail.com

காலாண்டு தேர்வு விடுமுறை...கொடைக்கான‌லில் குவிந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிகள்!

  • Share on

காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு கொடைக்கான‌லில் சுற்றுலாப்ப‌ய‌ணிகள் குவிந்தால், அங்குள்ள பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் காலாண்டு தேர்வு விடுமுறை ம‌ற்றும் தொட‌ர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வருகை அதிக‌ரித்துள்ளது . பிரதான சுற்றுலா இட‌ங்க‌ளான‌ மோய‌ர் சதுக்கம் , குணா குகை , தூண்பாறை , பைன் மரக்காடுகள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌ல‌ங்க‌ளில் மாறி வரும் கால நிலை மற்றும் குளிர்ந்த‌ சூழ‌லை அனுப‌வித்தும் மேக‌ கூட்ட‌ங்க‌ளுக்கு ந‌டுவே புகைப்ப‌ட‌ம் எடுத்தும் ம‌கிழ்ந்த‌ன‌ர் .மேலும் கொடைக்கான‌லில் க‌ட‌ந்த‌ நாட்க‌ளாக‌ பெய்த‌ ம‌ழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி , வ‌ட்ட‌க்கான‌ல் நீர் வீழ்ச்சி , உள்ளிட்ட‌ நீர்வீழ்ச்சிக‌ளில் நீர் ஆர்ப‌ரித்து கொட்டுவதை கண்டு மகிழ்ச்சிய‌டைந்துள்ள‌ன‌ர். விடுமுறையை முன்னிட்டு ஏராள‌மான‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் குவிந்துள்ள‌தால் வாக‌ன‌ பிரதான சாலைகளான வத்தலகுண்டு பிரதான சாலை , அப்சர்வேட்டரி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள்  முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • Share on

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு - அதிமுகவினர் சாலை மறியல்!

அமைச்சர்கள் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்

  • Share on