• vilasalnews@gmail.com

சூரியனை போற்றும் தினத்தில் இருந்து ஓர் புதிய உதயம் " விளாசல் "

  • Share on

உலகமெங்கிலும் பரந்துவிரிந்த பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் ஆனது இதழ்கள், செய்தித்தாள்கள், வானொலிகள் தொலைக்காட்சிகள் மூலமாக மக்களுக்கு  வந்து சேர்கின்றன.

செய்திகளைக் கொண்டு சேர்க்க புறாக்கள், ஒற்றர்களை பயன்படுத்திய சங்ககாலம் தொட்டு, கடிதங்கள், தந்தி, செய்தித்தாள்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் பலவற்றை இப்பிரபஞ்சம் கண்டிருக்கிறது.

ஒவ்வொரு விஷயத்தையும் அறிவதற்கான ஆர்வம் என்பது மனித இனத்திற்கே உண்டான  இயல்பு. அதனால் தான் செய்தி எனும் பரிமாணம் உருப்பெற்று, அதனை கொண்டு சேர்க்கும் வழிமுறைகளும் கண்டறியப்பட்டு, மனித வாழ்வில் பிரிக்க முடியாத, அவர்களது வாழ்வில் இரண்டற கலந்து விட்டது செய்திகளை அறியும் ஆவலும், தேடலும்.

மனிதன் அறிவு வளர்ச்சி பெற்ற காலத்திலிருந்து மற்றவர்களைப் பற்றியும் அவரது செயல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவனாக இருந்திருக்கின்றான். முதலில் செய்கையின் மூலமாகவும், மொழி வளர்ந்தபின் பேச்சின் துணையோடும் செய்திகளை அறிந்தும் பரப்பியும் வந்திருக்கின்றான். எழுத கற்றுக் கொண்டபின் அச்சுப்பொறி கண்டுபிடித்ததும் செய்திகளின் பரப்பளவு அதிகரித்தது.

போக்குவரத்து வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம் முன்னேற்றம் இவற்றின் விளைவாக இன்று மின்னணுக் கருவிகளின் துணையோடு செய்திகளை கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் வளர்ச்சி பெற்றுள்ளன.

உருண்டோடும் காலத்தில் உலகத்தின் இயக்கத்தில் மனித இனமானது  அனைத்து விதமான செயல்களையும் நடவடிக்கைகளையும் முன்னேற் பாடாகவே கொண்டு செல்லவே விரும்பி செயல்பட்டு வருகிறது. அதன் தாக்கம் தான் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகும்.

காற்றடிக்கும் திசை நோக்கி படகை செலுத்த தெரிந்த படகோட்டியால் மட்டுமே கரைசேர முடியும், என்ற அறிவு சார்ந்த சிந்தனையின் அடிப்படையில், மக்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஈடேற்றும் வகையில், இன்றைய இணைய உலகின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை கருத்தில்கொண்டு, ஒப்பற்ற உலக தமிழர்களின் தை திருநாளில், 2021 ஆம் ஆண்டில், தமிழர் வீட்டு செல்வம் தைமகள் ஈன்றெடுக்கும், இணைய உலகில் செய்திக்கான ஒரு புதிய  இணையதளம், விளாசல் நியூஸ்.காம் - www.vilasalnews.com என்ற ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கி இன்று முதல் அதிகாரப்பூர்வமாக, மக்களாகிய உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

உங்கள் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்று, மென்மேலும் வளர, மக்களாகிய, வாசகர்களாகிய தாங்கள் உறுதுணையாக இருந்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ ஆதாரமாக இருக்கும் பஞ்ச பூதங்களை இயக்குகின்ற மிகப்பெரிய சக்தியாக விளங்குகிற சூரியனுக்கு, தைத்திங்கள் முதல்நாள் உழவர்கள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சமைத்து  படைத்து வழிபடுகிற, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவான , தமிழர் விழாவாம் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்! நன்றி!

விரல்களை விசைப்பலகையில் வீசுங்கள்...

நம்ம www.vilasalnews.com பக்கத்தை படித்து பயன்பெறுங்கள்!

  - ஆசிரியர்
விளாசல்நியூஸ்.காம்

  • Share on

வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைகளை வழங்கினார்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

  • Share on