• vilasalnews@gmail.com

குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது!

  • Share on

குற்றால அருவிகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டதால், சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போதிய மழை இல்லை. வெயிலும் கடுமையாக அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி ஆகியவற்றில் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விடுமுறை தினம் என்பதால், குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் பாறையை ஒட்டி விழுந்தது.

சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர். பழைய குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

  • Share on

தக்காளி விலை திடீரென உயர காரணம் என்ன?

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!

  • Share on