திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருக்கும் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்டுள்ள திடீர் சோதனையால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார். இவர் தற்பொழுது திண்டுக்கல் ஆர்எம் காலனி 1வது கிராஸில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ( 23.06.23 ) காலை அவரது வீட்டில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவானது ஆணையர் மகேஸ்வரி வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு உயர் அதிகாரி ஒருவரது வீட்டில் மேற்கொள்ளப்படும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்த காலகாட்டத்தில், முறைகேகேட்டில் ஈடுபட்டது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது என பல்வேறு புகார்கள் வந்ததின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறதாக கூறப்படுகிறது. மேலும் ஆணையர் மகேஸ்வரி தொடர்புடைய மூன்று மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.