• vilasalnews@gmail.com

தமிழகத்தில் ஆளும் கட்சி அமைச்சர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை

  • Share on

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி மீது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக அரசு 2021 ஆம் ஆண்டு ஆட்சியமைத்ததிலிருந்து தமிழ்நாட்டில் திமுக அமைச்சர் ஒருவரது இடங்களில் நடைபெறும் முதல் வருமான வரி சோதனை இதுவாகும். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் பாஜக அரசு அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கையாக இது போன்ற ரெய்டுகளை நடத்துவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் வீட்டில் வருமானவரித் துறை சோதனையில் ஈடுபட்டு இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தமிழகத்தில் வெயில் தீவிரம் காட்டுவது இதனால் தானாம்!

இவ்வளவு கோடி அரசு நிலம் ஆக்கிரமிப்பா.. அதிமுக பிரமுகரிடமிருந்து சட்டப் போராட்டத்தின் மூலம் மீட்டது அரசு!

  • Share on