தமிழகம் புதுச்சேரியில் கோடை வெயில் முக்கியம் காட்டி வருகிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் நேற்று 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இது குறித்து கூறுகையில்:-
மோக்கா புயலால் காற்றின் ஈரப்பதம் குறைந்தது, கடல் காற்று தாமதமாக வீசுவது, ஈரப்பதமான மழை மேகக் கூட்டங்கள் இல்லாதது, மேற்கிலிருந்து வீசும் வறண்ட காற்று போன்ற சூழலால் வெயிலின் தீவிரம் அதிகமாக உணரப்படுகிறது. வரும் நாட்களில் மாநிலத்தின் சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.