• vilasalnews@gmail.com

டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை - போக்சோ சட்டத்தில் கைது

  • Share on

துறையூர் அருகே டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வலையபட்டியைச் சேர்ந்த தேவி ( 40 ), துறையூர் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார். தற்போது சத்திரப்பட்டியில் தங்கி, பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.

அவரிடம் டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவனுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி தேவி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவனின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 

இது குறித்து குழந்தைகள் நலக்குழு மற்றும் மகளிர் போலீசார் விசாரித்தனர். இதனை அடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் தேவியை நேற்று கைது செய்தனர்.

  • Share on

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!

தமிழகத்தில் வெயில் தீவிரம் காட்டுவது இதனால் தானாம்!

  • Share on