குஷ்பூ சென்று கொண்டிருந்த கார் திடீரென்று விபத்துக்கு உள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் ஐக்கியமானார் நடிகை குஷ்பூ. அதன்பின் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூருக்கு இன்று கார் மூலம் கிளம்பினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கார் சென்ற போது பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற லாரி ஒன்று முந்திச்செல்ல முயன்றது. அப்போது குஷ்பு சென்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் கண்ணாடி உடைந்தது. முன்புற சீட்டில் அமர்ந்து குஷ்பூ பயணித்து வந்தார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த குஷ்பு, தான் தனது கணவர் கும்பிடும் கடவுள் முருகன் அருளினால் தப்பியதாக கூறினார். மேலும், வேல் யாத்திரையில் தான் பங்கேற்க வேண்டும் என்பது முருகனின் கட்டளை என்றும் அதை நிறைவேற்றுவேன் என்றும் கூறியுள்ளார் குஷ்பு. விபத்து ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மாற்று காரில் புறப்பட்டு சென்றார் குஷ்பூ.