• vilasalnews@gmail.com

வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட குறைவு ஏன்?

  • Share on

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, கடந்த ஆண்டை விட குறைந்ததற்கு, குளிர்கால தாக்கமும், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், வேறு பகுதிகளுக்கு சென்றதுமே காரணம் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, இம்மாதம், 13ம் தேதி முழுமையாக நிறைவு பெற்றது. கடந்த ஆண்டைவிட, 58 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

கடந்த, 2021ல் இயல்பை விட, 59 சதவீதம் அதிகமாக, 71 செ.மீ., பெய்திருந்தது. ஆனால், 2022ல் டிசம்பருடன் முடிந்த காலத்தில், இயல்பை விட, 1 சதவீதம் அதிகமாக, 45 செ.மீ., பெய்துள்ளது. ஆண்டு சராசரி மழை அளவிலும், 2021ஐ விட, 2022ல், 25 சதவீதம் மழை குறைந்துள்ளது.

சென்னையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு துவக்கத்தில் ஒன்றிரண்டு நாட்கள் பெய்துவிட்டு, பின் குறைந்து விட்டது.

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையை விட, தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது. அதேநேரம், வடகிழக்கு பருவமழை, இயல்பில் இருந்து குறைய வில்லை. மாறாக, முந்தைய ஆண்டை விட, வடகிழக்கு பருவமழை அளவு குறைந்து உள்ளது.

இதற்கு, இந்திய கடற்பகுதியில் நிலவும், 'லா நினா' என்ற வெப்பம் அதிகரிக்கும் சூழ்நிலையே காரணம். காற்றின் திசை மாற்றங்களால், இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால், தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை, வடகிழக்கு மாநிலத்திலும், மற்றொன்று கடலிலேயே பெய்து விட்டதால், மழை அளவு குறைந்து விட்டது.

தமிழக பகுதிகளில் குளிர்ந்த பனியின் தாக்கமும், முன் கூட்டியே அதிகரித்து விட்டதும், மழை அளவு முந்தைய ஆண்டை விட குறைய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

  • Share on

தன்னிகரில்லா தமிழ் சமூக பெருமக்களின் பேராதரவுடன் 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும்மகிழ்ச்சி!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!

  • Share on