மானூருக்கு அமைச்சர் கீதா ஜீவன் வந்ததையொட்டி பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு தாக்கப்பட்டவை கண்டித்தும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மானூருக்கு நேற்று அரசு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் கீதா ஜீவனுக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என பாஜக கட்சியினர் அறிவித்தனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக நிர்வாகிகள் முருகேசன், முத்தையா, வெள்ளத்துரை உட்பட நான்கு பேரை மானூர் காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி மற்றும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மாவட்ட தலைவர் தயா சங்க தலைமையில், கட்சியினர் அங்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அமைச்சர் நிகழ்ச்சி முடிந்ததும் பாஜக கட்சியினர் விடுவிக்கப்பட்டனர்.