• vilasalnews@gmail.com

நாடார் மகாஜன சங்கத் தேர்தல் விறுவிறு! கரிக்கோல் ராஜ் Vs என்.ஆர்.தனபாலன்! யார் கை ஓங்கும்?

  • Share on

ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் மேற்பார்வையில் நாடார் மகாஜன சங்கத் தேர்தல் மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

62,000க்கும் மேற்பட்டோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பதால் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

நாடார் மகாஜன சங்கத் தலைவர் பதவிக்கு கரிக்கோல் ராஜ், என்.ஆர்.தனபாலன், உள்ளிட்ட 3 பேர் போட்டியில் இருப்பது கவனிக்கத்தக்கது.

தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு பல்லாண்டு காலமாக நாடார் மகாஜன சங்கம் இயங்கி வருகிறது. நாடார் சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு அறப்பணிகளை செய்து வரும் இச்சங்கத்திற்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நாடார் மகாஜன சங்கத் தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவியிடங்களுக்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தல் நடைபெற்று வரும் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தல் ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் மேற்பார்வையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 62,129 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பதால் காலை 8 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துச் செல்கின்றனர். மாலை 5 மணியோடு தேர்தல் நிறைவு பெறும் நிலையில் இன்று இரவே முடிவுகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடார் மகாஜன சங்கத் தலைவர் பதவிக்கு கரிக்கோல் ராஜ், என்.ஆர்.தனபாலன், உள்ளிட்ட 3 பேர் போட்டியில் இருப்பது கவனிக்கத்தக்கது.

கரிக்கோல் ராஜும், என்.ஆர்.தனபாலனும், நாடார் சமுதாய அமைப்புகள், மற்றும் சமுதாய மக்களிடம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆதரவு திரட்டி வந்தனர். இதனிடையே நாடார் சமுதாய மக்களின் தேர்வு யாராக இருக்கும் என்பது இன்றிரவு தெரிந்துவிடும். நாடார் மகாஜன சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு மாவட்ட அளவிலும் நிர்வாகிகள் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடார் சமுதாயத்தை சேர்ந்த பலரும் தொழில், கல்வி, அரசியல், மருத்துவம், என பல துறைகளில் உலகளவில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே இந்த தேர்தலின் முடிவு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

  • Share on

மழை வருது சார்! ட்விட்டரில் லீவ் கேட்ட மாணவன்! என்ஜாய் பண்ணுங்க.. விருதுநகர் ஆட்சியரின் கலகல பதில்!

அன்று திருவள்ளுவர்... இன்று அம்பேத்கர் - காவி உடையில் நெற்றியில் பட்டையிட்டு குங்குமப்பொட்டு!

  • Share on