பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ள நடிகர் விஷால், பா.ஜ.,வில் சேருவாரோ என்ற கேள்வி எழுந்த 'ஆன்மிகம் வேறு; அரசியல் வேறு' என, அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் காசியில் தரிசனம் செய்த பின், கோவிலை சிறப்பாக புதுப்பித்து, எளிதில் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதாக கூறி, பிரதமர் மோடியை புகழ்ழ்ந்து, 'கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்' என்றார்.
லோக்சபா தேர்தல் வரும் நேரத்தில், விஷாலின் இந்த கருத்து, அவர் பா.ஜ.,வில் சேர திட்டமிட்டு உள்ளாரா என்ற கேள்வியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, விஷால் கூறியதாவது:
நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்றாலும், அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தை பார்த்தால் ஆச்சர்யப்படுவர். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேன். மற்றபடி இதில் அரசியல் எதுவும் இல்லை.
ஆன்மிக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.