தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவன குடோனில் ரூ.5லட்சம் மதிப்புள்ள சிமென்ட் மூடைகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை பை பாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியின் குடோனில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 968 சிமெண்ட் மூடைகள் திருட்டுப் போய்விட்டதாம். இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாளர் ராமராஜ் என்பவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் பதிந்து விசாரணை நடத்தியதில், அந்த குடோனில் பொறுப்பாளராக பணிபுரிந்த தூத்துக்குடி முஸ்லிம் தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் செல்வம் (37), முருகேசன் நகரை சேர்ந்த சேவியர் விக்டோரியா மகன் டேனியல் ராஜ் (29) ஆகிய 2பேரும் சிமெண்ட் மூடைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.