• vilasalnews@gmail.com

ரூ.2500 பெறுவதற்கான டோக்கன்கள் டிச.26 முதல் வினியோகம்

  • Share on

பொங்கல் பரிசு தொகுப்பு  2500 ரூபாய் பெறுவதற்கான டோக்கன்கள் வீடுகள் தோறும் வரும் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோக பணியினை ஜனவரி 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிக்குள் முடிக்கவும், விடுபட்டவர்களுக்கு 13 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, ஒரு மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி பொருட்கள் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Share on

பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு..!

  • Share on