பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை என்.ஐ.ஏ. கூறியதையடுத்து, நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது.
இந்த நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் முன்பாக இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் நிலையில், சென்னையில் மட்டும் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிரமாக கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர்.