மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிகவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
நடிகர் சூரிக்கு மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன்' என்ற பெயரில ஓட்டல்கள் உள்ளன. சமீப காலத்தில் துவக்கப்பட்ட இந்த ஓட்டல்கள் சூரியுடையது என்பதால் எந்நேரமும் பிஸியாக செயல்பட்டன.
இந்த ஓட்டல்களுக்கு தலைமையிடமாக காமராஜர் சாலை தெப்பக்குளம் அருகே ஓட்டல் உள்ளது. இங்கு வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் குழு சோதனை நடத்தினர். உணவுப்பொருட்கள் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சோதனை நடந்தது.
இச்சோதனையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அலுவலகத்திற்கு வந்து விளக்கமளிக்கவும் ஓட்டல் ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்