• vilasalnews@gmail.com

பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம் - 5 பேர் ஊருக்குள் நுழைய தடை

  • Share on

பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை விவகாரத்தில் புகாருக்குள்ளான 5  பேரும் ஊருக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகியோர் 6 மாதம் பாஞ்சாங்குளம் கிராமத்தில் நுழைய சிறப்பு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பாஞ்சாங்குளம் கிராமத்தில் பள்ளி மாணவா்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்து தீண்டாமை காட்டியதாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. பெட்டிக் கடை உரிமையாளரான மகேஸ்வரன்(40), ராமச்சந்திரன் என்ற மூா்த்தி (22) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கிராமத்தைச் சுற்றி காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே, பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா்-மாணவிகளிடையே பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் கூறப்பட்டது. இதுதொடா்பாக, அப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா்  ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிலையில் ஊர்கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டியலின மாணவர்களுக்கு  தின்பண்டம் தர மறுத்த விவகாரத்தில்

மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகியோர் 6 மாதம் பாஞ்சாங்குளம் கிராமத்தில் நுழைய நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார்.

  • Share on

டி.டி.எப் வாசன் மீது வழக்குப் பதிவு; ஜி.பி முத்து எஸ்கேப்

நடிகர் சூரி ஓட்டலில் சோதனை

  • Share on