• vilasalnews@gmail.com

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தனியார் மூலம் 400 ஓட்டுநர்கள் : ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு!

  • Share on

அரசு விரைவு பேருந்துகளை இயக்குவதற்காக 400 ஓட்டுநர்களை தனியார் நிறுவனங்கள் மூலம் பணியமர்த்த விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்த அறிவிப்பில்,

அரசு விரைவு பேருந்துகளை இயக்குவதற்கு கனரக போக்குவரத்து வாகன உரிமை வைத்துள்ள ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த விரும்பும் அரசுக்குச் சொந்தமான அல்லது அரசு அங்கீகரித்த தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான ஒப்பந்த படிவம், சென்னை, பல்லவன் சாலையில் உள்ள விரைவு போக்குவரத்துக் கழக துணை மேலாளரிடம் (உபகரணங்கள்) செப்.12ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். இதையடுத்து செப்.13ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் சார்பில் சென்னையில் மட்டும் 120 ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும். குறைந்தபட்சமாக காரைக்குடியில் 10 ஓட்டுநர்கள் என 12 பணிமனைகளில் மொத்தம் 400 ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும். அவர்கள் அனைவரும் 24 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும், கிளை மேலாளர் வழங்கும் பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளன.

  • Share on

நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி!

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்!

  • Share on