குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் செல்லாத ஓட்டு போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. அதில் திமுக கூட்டணியில் இருக்கும் எம்எல்ஏ ஒருவர் செல்லாத ஓட்டு போட்டது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 234 எம் எல் ஏக்கள் இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியினர் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவையும், திமுக கூட்டணியினர் எதிர் கட்சி வேட்பாளரான யஸ்வந்த் சின்ஹாவுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதன்படி அதிமுக கூட்டணியில் 75 வாக்குகளும், திமுக கூட்டணியில் இருக்கு 159 வாக்குகளும் உள்ளன. நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட போது அதிமுக கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய 75 வாக்குகள் சரியாக கிடைத்துள்ளது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் 159 வாக்குகள் கிடைக்க வேண்டிய இடத்தில் 158 வாக்குகள் மட்டுமே எதிர் கட்சி வேட்பாளரான சின்ஹாவிற்கு கிடைத்துள்ளது.
ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக கூட்டணியில் உள்ள எம்எல்ஏ ஒருவர் செல்லாத ஓட்டு போட்டது தெரியவந்துள்ளது. தற்போது அந்த செல்லாத ஓட்டு போட்ட எம்எல்ஏ யார் என்பது அரசியல் கட்சியினர் இடையே பேசுப்பொருளாகியுள்ளது