வேப்பலோடை வே. பாண்டியாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆனந்ததாண்டவம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் இன்று (20.07.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பலோடை வே. பாண்டியாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் வேப்பலோடை கழுகாசலபுரம் பகுதியை சேர்ந்தவர்களான ராமலிங்கம் மகன் கணேசன் (24) மற்றும் தூண்டி மகன் கருப்பசாமி (24) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனடியாக மேற்படி போலீசார் கணேசன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தருவைகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.