• vilasalnews@gmail.com

இனி வேற நித்யானந்தாவை பார்ப்பீர்கள்..அதிரடி அறிவிப்பு

  • Share on

பெரும் ஆன்மீக கடமைகள் காத்திருக்கின்றன. உலகத்திற்கு நாம் செய்ய வேண்டிய நற்பணிகள் அதிகம் இருக்கிறது. திடீரென கண்ணை திறந்து பார்த்தால் 3 மாதம் கழித்து உலகம் மொத்தமாக மாறி இருக்கிறது என்று நித்யானந்தா கூறியுள்ளார். இனிமேல் என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை என்றும் பேசியுள்ளார் நித்யானந்தா.

மதுரை சித்திரை திருவிழாவை கைலாசாவில் இருந்து லைவாக பார்த்து மதுரை மக்களுக்கு ஆசி வழங்கினார். அதன்பிறகு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது.

அதாவது, உப்புக்காற்று, உணவு முறையில் மாற்றம், காலநிலை மாற்றம் என அனைத்தும் நித்தியானந்தா உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அதனால் அவர் உடல் மெலிந்து சோர்வானதாகவும் கூறப்பட்டது.

மேலும், நித்தியானந்தாவுக்கு கல்லீரல் அலர்ஜீயும், சிறுநீரக தொந்தரவும் ஏற்பட்டதாகவும், அது போக போக நுரையிரல் தொற்றுவரை சென்று மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வருகின்றார் என்றும் கூறப்பட்டது.

அவை புரளி எனவும், தான் ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பதாகவும் நித்யானந்தா தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதன்பிறகு சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி, தொடர்ந்து சில கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார். எனினும், அதன் பின்பு அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்து வந்தது.

குரு பூர்ணிமா நாளில் நேரில் தோன்றி பேசுவேன் என்று கடந்த வாரமே அறிவித்தார் நித்யானந்தா. அதன்படி நேரில் தோன்றி பேசினார். சமாதி நிலை பற்றி ஒன்று சொல்கிறேன். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நம் எல்லோருக்குள்ளேயும் காலாவதி தேதி இல்லாத, காலாவதி ஆகாத முழுமையான ஒன்று இருக்கின்றது. அந்த காலாவதி ஆகாத, காலாவதி தேதி இல்லாத நிரந்தரமான ஒன்றோடு ஒன்றிணைப்பது தான் சமாதி நிலை. அழிகிற பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று உடல், மனம், உணர்ச்சி. இதெல்லாம் அழிவது. ஆனால் இதை எல்லாம் தாண்டி அழிவில்லாத ஒன்று நம்மில் இருக்கிறது. அதுதான் ஆன்மா. அந்த ஆன்மாவில் தான் பரமசிவ பரம்பொருள் பிரதிபலிக்கிறார்.

எனக்கு 3 வயதாக இருக்கும்போது என் குருமார்கள் மடியில் அமர வைத்து சதுர்மாசியத்தை தொடங்கி வைத்தார்கள். அன்றில் இருந்து இன்று வரை இந்து சமயம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் செய்திருக்கிறேன். அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்து விட்டாலே பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார். அவருக்குள் நீங்கள் கரைந்து விடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. அதில் பல நிலைகள் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் குறைந்தபட்சம் 10 அல்லது 20 பேராக சமாதி நிலையை அனுபவமாக பார்த்தவர்கள் இருந்தார்கள்.

நான் வளர்ந்த திருவண்ணாமலையில் நிறைய பேர் இருந்தார்கள். 80-களில் நான் அங்கு இருந்த போதே சமாதி நிலையில் 100 பேர் இருந்தார்கள். இன்று கூட அங்கு சிலர் இருக்கிறார்கள். உலகத்தின் பல பாகங்களில் இருந்து ஞான போதகரை பிடித்து இழுத்து வா என்று அழைத்து உலகத்திற்கு தந்து கொண்டிருப்பவர் அண்ணாமலையான். ஒரு தலைமுறைக்கு முன்பு கூட இந்த சமாதி நிலை என்பது வாழ்க்கை முறையாக இருந்தது.

பரமசிவன் பேரருளால் அது மீண்டும் வாழ்க்கை முறையாக மாறும். அந்த திருப்பணி தான் கைலாசத்தின் முதல் திருப்பணி. நவராத்திரி, விஜயதசமி வரை அடுத்த 4 மாதங்கள் இதில் கவனம் செலுத்துவோம். ஏற்கனவே லட்சக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு பெங்களூரு ஆதி கைலாச விடுதியில் உள்ளது. அதை மற்றவர்களுக்கு இலவசமாக அளியுங்கள்.

பெரும் ஆன்மீக கடமைகள் காத்திருக்கின்றன. உலகத்திற்கு நாம் செய்ய வேண்டிய நற்பணிகள் அதிகம் இருக்கிறது. திடீரென கண்ணை திறந்து பார்த்தால் 3 மாதம் கழித்து உலகம் மொத்தமாக மாறி இருக்கிறது. நிறைய சொல்லலாம்.

ஏப்ரல் 13ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை நிறைய நடந்துள்ளது. அது உங்களுக்கு 3 மாதம். எனக்கு ஒரு யுகம். கடந்த 3 மாதத்தில் எனது உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இனிமேல் என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை.

கைலாசாவும் அப்டேட் ஆகியுள்ளது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி லிங்கோபத்வரை ஒளியாக நான் பார்த்தவுடன் அனைத்தும் மறந்துவிட்டது. இனி வரும் நாட்களில் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன். பரமசிவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் 10 ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பது பழைய பழமொழி. ஆனால் புதிய உண்மை என்னவென்றால், அவர் உங்களை நோக்கி பில்லியன் கணக்கான படிகளை எடுக்கிறார். அப்போது தான் நீங்கள் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பீர்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன், அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கம் மற்றும் முடிவுகள் ஆகியவற்றை பார்க்கும்போது இந்த 3 மாத கால இடைவெளியில் நடந்தது உங்களுக்கு புரியும். அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்து விட்டாலே பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார். அவருக்குள் நீங்கள் கரைந்து விடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. அதில் பல நிலைகள் உள்ளது என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்.

  • Share on

அமைச்சர் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை எச்சரிக்கை

செய்தியாளர் ஒருவரை அடிக்கப் பாய்வது போல் சென்று... மிரட்டிய திமுக அமைச்சர்!

  • Share on