• vilasalnews@gmail.com

அமைச்சர் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை எச்சரிக்கை

  • Share on

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவனத்தம் கிராமத்திற்கு சென்ற  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மனு கொடுக்க வந்த அந்த தொகுதியை சேர்ந்த பெண்ணை பேப்பரால் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது

இந்தநிலையில்,தி.மு.க அரசின் தவறுகளை நாள்தோறும் சுட்டிக்காட்டிவரும் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஒரு பெண்ணை பேப்பரால் அடித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன் அமைச்சர் 48 மணி நேத்திற்குள் பதவி விலகவேண்டும் இல்லையேல் தமிழக பா.ஜனதாவினர் அவரது வீட்டை முற்றுகை இடுவோம் என்று எச்சரித்துள்ள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த @arivalayam அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை  @BJP4TamilNadu  முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

  • Share on

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற பாஜக தலைவர்கள் விருப்பம்

இனி வேற நித்யானந்தாவை பார்ப்பீர்கள்..அதிரடி அறிவிப்பு

  • Share on